ஒரே வருடத்தில் நாட்டை விட்டு வெளியேறிய 300,000ற்கும் அதிகமான இலங்கையர்கள்
இலங்கையில் இருந்து இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 300,000ற்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்ட தரவுகளுக்கு அமைய 300,162 இலங்கையர்கள் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காகச் சென்றுள்ளனர்.
அவர்களில் 177, 804 ஆண்களும், 122, 358 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றவர்களில் பெரும்பாலானோர் குவைத்துக்கு சென்றுள்ளனர்.
அதன்படி, 73,995 பேர் குவைத்துக்கும், 49,499 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும், 7,002 பேர் தென் கொரியாவுக்கும் சென்றுள்ளனர்.
அத்துடன் 9,211 பேர் இஸ்ரேலுக்கும், 10,274 பேர் ருமேனியாவுக்கும் 8,251 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் சுமார் 311,000 பேர் தொழில் வாய்ப்புக்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.