ஜெர்மனியில் கொடுப்பனவில் அதிகரிப்பு – பெற்றோருக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குடும்பங்களில் இருந்து பிரிந்து வாழும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தைகளுக்கான கொடுப்பனவு தொடர்பில் டுஸில்டோ அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 450 யூரோ வழங்கப்பட்டு வரும் நிலையில், 452 யூரோ வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 6 வயதுக்கும் 12 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு 551 யூரோ வழங்கப்படும் நிலையில், 554 யூரோ வழங்க வேண்டும்.
12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதினருக்கு 645 யூரோ வழங்கப்பட்டு வரும் நிலையில் 649 யூரோ வழங்கப்பட வேண்டும். பதின்ம வயதினருக்கு 689 யுரோ வழங்கப்பட்டு வரும் நிலையில், 699 யூரோ வழங்கப்பட வேண்டும் என, டுஸில்டோ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்கலைகழக மாணவர்களுக்கு இதுவரை 930 யூரோ வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 990 யூரோவாக வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.