யாழில் காய்ச்சலால் 7 பேர் மரணம் – காரணம் கண்டுபிடிப்பு
வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பலவற்றில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் மருத்துவர் துஷானி டபரேரா இதனைத் தெரிவித்தார்.
உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)