இலங்கை: பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவர் கைது!
இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலுள்ள பெண் ஒருவரை இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மேலும் சிலருடன் இணைந்து கடந்த 9 ஆம் திகதி இந்த கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதான குறித்த பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்றிரவு கைதான இருவரும் 21 மற்றும் 31 வயது மதிக்கதக்கவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கிரியெல்ல காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)