ரஷ்யாவில் அதிகரித்துள்ள ஊழல் மோசடி : 30 ஆயிரம் பேருக்கு எதிராக நடவடிக்கை!
ரஷ்யாவில் போரின் காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஒரே ஆண்டில் 30000 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறியதற்காக கிட்டத்தட்ட 30,000 அதிகாரிகள் பிடிபட்டுள்ளனர் என புடினின் வழக்கறிஞர் ஜெனரல் இகோர் கிராஸ்னோவ் தெரிவித்துள்ளார்.
அவர் ரஷ்ய அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மொத்தத்தில் 500 பேர் நம்பிக்கை இழந்தமையால் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்குகளில் பாதி லஞ்சம் சம்பந்தப்பட்டதாக தெரிவித்த அவர் கடந்த 06 மாதங்களில் 200 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)