இலங்கை – யாழில் பரவும் மர்ம காய்ச்சல் : மக்களுக்கு சுவாச கோளாறுகள் இருப்பதாகவும் எச்சரிக்கை!
யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்தியர் டொக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரவும் காய்ச்சலுக்கு லெப்டோஸ்பைரோசிஸுடன் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
அடையாளம் தெரியாத காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பருவகால நெல் விவசாயம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.