தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் விபரீத முயற்சி

தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Kim Yong-hyun உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் அவர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் அவர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டில் கலகம் ஏற்படுத்தியதாகவும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்ற வாரம் ஜனாதிபதி Yoon Suk Yeol இராணுவ ஆட்சியை அறிவித்து, ஆறு மணி நேரத்துக்குப் பிறகு நாடாளுமன்ற நெருக்குதல் காரணமாக அதை மீட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி Yoon Suk Yeol இராணுவ ஆட்சியை அறிவித்ததற்கும் நாடாளுமன்றத்திற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததற்கும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிம் தூண்டுகோலாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
(Visited 17 times, 1 visits today)