சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளராக டாக்டர் அனில் ஜாசிங்க நியமனம்
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் கலாநிதி ஜாசிங்கவிடம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.





