பிரான்ஸ் அரசியல் நெருக்கடி: 48 மணிநேரத்தில் புதிய பிரதமர்!

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று தீவிர வலது மற்றும் தீவிர இடதுகளைத் தவிர அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் ஒரு அரசாங்கத்தை அமைப்பது பற்றிய கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.
ஜூன் தேர்தலின் போது தொங்கு பாராளுமன்றத்தின் கீழ் பிரதான கட்சிகள் ஒன்றாக அமர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
இரண்டரை மணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்துவரும் 48 மணிநேரத்தில் புதிய பிரதமரை நியமிக்கும் முனைப்புடன் ஜனாதிபதி மக்ரோன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 1 visits today)