இங்கிலாந்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் : ஒரு இலட்சம் அகதிகளை நாடுகடத்தும் மற்றுமோர் ஐரோப்பிய நாடு!
சிரியாவின் சர்வாதிகாரி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி கவிழக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜிஹாத் பயங்கரவாதிகளால் பிரிட்டனுக்கு ஆபத்து இருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அறிக்கைகளின்படி, இங்கிலாந்தில் இருந்து ஒரு டஜன் கண்கான தீவிர ISIS போர்வீரர்கள் வடக்கு சிரியாவில் குர்திஷ்களால் நடத்தப்படும் சிறைகளில், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் பயங்கரவாதிகள் விடுவிக்கப்படலாம் என்ற கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உள்துறை அலுவலகம் சிரியாவில் இருந்து அனைத்து புகலிட விண்ணப்பங்களையும் முடக்குவதை உறுதிப்படுத்தியது.
அதேபோல் ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் சிரிய புகலிட விண்ணப்பங்களை முடக்கியுள்ளன.
ஆஸ்திரியா ஒரு படி மேலே சென்று தனது சிரிய அகதிகளை நாடு கடத்தும் திட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரியாவில் சுமார் 100,000 சிரிய அகதிகள் தற்போது நாடுகடத்தப்படும் அச்சத்தில் உள்ளனர்.