தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஊழலுக்கு எதிராக தன்னை அர்ப்பணிப்பேன் -இலங்கை ஜனாதிபதி!
தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக தன்னை அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு தேசிய கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியாக நிறைவேற்றாவிட்டால் சட்டங்களை இயற்றுவதால் பலன் இல்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், “வழக்குகளை வாபஸ் பெற்றால், எதற்காக வாபஸ் வாங்குகிறோம் என்பதை விளக்க வேண்டும். ஏழெட்டு கோப்புகள் இழுப்பறைக்கு பின்னால் மாட்டிக்கொண்டால், அவை ஏன் மாட்டிக் கொள்கின்றன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டாமா? எனவே, எங்கள் உடம்பு முழுவதும் சரிந்துவிட்டது என்று கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.