தைவான் நீரிணை பகுதியில் பரவலான இராணுவ பயிற்சிக்கு தயாராகி வரும் சீனா!
தைவானின் ஜனாதிபதி ஹவாய் மற்றும் குவாமுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமைக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவின் இராணுவம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட பயிற்சிகளுக்கு தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது.
தைவான் நீரிணை மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளுக்குள் சீன கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களைக் கண்டறிந்ததாகவும், கடந்த புதன்கிழமை வரை சீனா அதன் தென்கிழக்கு கடற்கரையில் வான்வெளியைக் கட்டுப்படுத்தியதாகவும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த தகவல்களை சீனா உறுதிப்படுத்தவில்லை. தைவான் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை, அவசரகால பதில் மையத்தை அமைத்து போர் தயார்நிலை பயிற்சிகளை அறிமுகப்படுத்தியதாகக் கூறியது.
நீண்ட நாட்களாக இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வருிகின்ற நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)