விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன் – சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரட்டும் சொற்களைப் பயன்படுத்திய 36 வயது நபர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் திகதி சம்பவம் நடந்தது. சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானத்தில் ஏறும்போது அந்த நபர் மிரட்டியதாக நம்பப்படுகிறது.
விமானத்தை விபத்துக்குள்ளாக்கப் போவதாக விமான பணியாளரிடம் அவர் கூறினார். உடனே விமானத்திலிருந்து குறித்த நபர் வெளியேற்றப்பட்டுத் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த அறையிலும் அவர் மீண்டும் அதே வார்த்தைகளை கூறியதாக கூறப்படுகிறது.
மிரட்டும் வகையில் சொற்களைப் பயன்படுத்திப் பீதியை ஏற்படுத்தியதாக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். துப்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.