சுவிட்ஸர்லாந்தில் விருந்தில் ஏற்பட்ட விபரீதம் – பலர் பாதிப்பு – 17 பேர் மருத்துவமனையில்

சுவிட்ஸர்லாந்தில் 20க்கும் மேற்பட்டோர் கார்பன் மொனொக்ஸைட் (carbon monoxide) நச்சுப்புகையால் பாதிக்கப்பட்டனர்.
மத்திய சுவிட்ஸர்லாந்து முகாம் பகுதியில் நடந்த விருந்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிஸ்வில் (Giswil) என்ற பகுதியில் சம்பவம் நடந்ததாக வட்டார பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முகாமில் கார்பன் மொனொக்ஸைட் அதிகளவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
26 பேர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர். அதில் 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
முதலுதவியாளர்கள், மீட்புப்பணி ஊழியர்களோடு இரண்டு ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)