கடலுக்கு செல்ல வேண்டாம் : இலங்கையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல்வாழ் மக்களுக்கு அறிவித்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)