அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த சிரிய எதிர்ப்புப் போராளிகள்! அடுத்து என்ன?
தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை “சிரியா” போராட்ட குழுவினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு வடக்கு சிரியாவில் உள்ள “சிரியா” போராட்ட குழுவினர் அரசுக்கு எதிராக திடீர்த் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையிலான, கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
“சிரியா” போராட்ட குழுவினர்களின் தாக்குதலைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் 3,70,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல், ஏற்கெனவே மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் வடக்கு சிரிய மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குவதாக ஐ.நா கூறியுள்ளது.
தாக்குதல் நடைபெறும் நகரங்களில் முக்கியப் பகுதிகளில் வசிக்கும் சில மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர முடியாமல் தவிக்கின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட இந்தத் தாக்குதலில் 111 பொதுமக்கள் உள்பட 820 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது பிரிட்டனை சேர்ந்த எஸ்.ஓ.ஹெச்.ஆர் போர் கண்காணிப்புக் குழு.
ஹோம்ஸ் நகரின் வடக்கில் அமைந்துள்ள ஹமா பகுதியை டிசம்பர் 5ஆம் திகதி “சிரியா” போராட்ட குழுவினர்கள் கைப்பற்றினர். கடந்த வாரம் அலெப்போ நகரை இழந்த அதிபர் அசாத்திற்கு, இது இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.