ட்ரம்ப், மக்ரோன் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய மூன்று ஜனாதிபதிகள் மும்முனை சந்திப்பு
டொனால் ட்ரம்ப் – இம்மானுவல் மக்ரோன் – வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய மூன்று ஜனாதிபதிகள் சனிக்கிழமையன்று மும்முனை சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர்.
நோர்து-டேம் திறப்பு விழாவுக்காக வருகை தந்துள்ள அமெரிக்க மற்றும் உக்ரேனிய ஜனாதிபதிகளை வரவேற்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இருவரையும் சந்தித்து உரையாக வைத்துள்ளார்.
நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டிரம்ப் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
டொனால் ட்ரம்ப் – இம்மானுவல் மக்ரோன் சந்திப்பானது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பைக் குறிக்கும்
டொனால்ட் ட்ரம்ப் எலிசே மாளிகைக்கு 4.40 மணிக்கு வருகை தந்தார். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மாலை 5.30 மணிக்கு எலிசேக்கு வருகை தந்தார். பின்னர் மூவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி சந்தித்துக்கொண்டனர்.
மாலை 6.10 மணி வரை சந்திப்பு தொடர்ந்தது. அவர்களுடனான சந்திப்பு இன்று மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதி வேகமாக யுத்த நிறுத்தம் ஒன்றை உக்ரேனில் தோற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.