நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தும் ஜப்பான் : மகிழ்ச்சியில் தாய்மார்!
ஜப்பானின் டோக்கிய நகரில் குழந்தை பிறப்பு விகிதம் சாதனை மட்டத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக வேலை செய்யும் தாய்மார்களுக்கு உதவுதல் மற்றும் கருவுறுதல் விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
டோக்கியோ பெருநகர அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கலாம்.
டோக்கியோவின் ஆளுநர் யூரிகோ கொய்கே வெளியிட்ட அறிவிப்பில், நாங்கள் பணி முறைகளை மறுபரிசீலனை செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் பிறப்பு விகிதம் 1.2 என்ற சாதனையை எட்டியது. 2023 ஆம் ஆண்டில் 727,277 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 43,000 குறைவாக உள்ளது என்று நாட்டின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன்புரி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.