தென்னாப்பிரிக்காவில் தங்கத்திற்காக உயிரை பணயம் வைக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு புமலங்கா மாகாணத்தில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கையின் முதல் நாளில் இந்த வார தொடக்கத்தில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டினர் எனவும் அவர்கள் தங்கம் தேடுவதற்காக தங்கள் விருப்பத்திற்கு மாறாக நிலத்தடியில் தள்ளப்பட்டதாகக் கூறுகின்றனர்.
சுரங்கத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தினார், மேலும் பிராந்தியத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)