இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் தேங்காய் விலை உயர்வு – சிதறு தேங்காய் வழிபாடுகளை குறைத்த பக்தர்கள்

கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, சுமார் 80 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது தேங்காய்களின் விலை உயர்வைக் கருத்திற் கொண்டு பக்தர்கள் சிதறு தேங்காய் உடைப்பதைத் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய் தட்டுப்பாடு மற்றும் தேங்காயின் விலை உயர்வால் கதிர்காமம், செல்ல கதிர்காமம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இனிப்பு வகைகளை உற்பத்தி செய்யும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கதிர்காம யாத்திரிகர்கள் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, வழக்கமாக உள்ள நிலையில் தேங்காய்களின் அதிக விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் உடைத்து வழிபடுவது, 80 சதவீதம் குறைந்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!