வணிகம்

ஸ்பெயினில் 500 ஆண்டுகளாக இடைவிடாமல் இயங்கும் உணவகம்

ஸ்பெயினில் உணவகம் ஒன்று தொடர்ந்து 500 ஆண்டுகளாக இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் அந்த ஹொஸ்டால் டி பினோஸ் (Hostal de Pinos) உணவகம் கட்டலோனியா வட்டாரத்துக்கு மத்தியில் அமைந்துள்ளது.

16ஆம் நூற்றாண்டில் யாத்ரிகர்களுக்கு உணவும் தங்கும் வசதியும் வழங்குவதற்காக அது தொடங்கப்பட்டது.

1677ஆம் ஆண்டிலிருந்து கட்டடத்தில் எந்த மாற்றமும் இல்லை. உணவகத்தின் வாடிக்கையாளர்கள் அந்தக்காலத்துக்கே செல்வதாக உணர்கின்றனர்.

அந்த உணர்வை வேறெங்கும் பெற்றதில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். மொனிக்கா செகீஸ் (Monica Segues) குடும்பத்தினர் 20 ஆண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

உணவகத்தின் 500ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றதில் குடும்பத்தினருக்குப் பேரானந்தம் என குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை செய்தி வணிகம்

நாளை பங்குச் சந்தை மூடப்படும்

  கொழும்பு பங்குச் சந்தை நாளை நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால்
உலகம் வணிகம்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

  உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்