ஆஸ்திரேலியாவை சமாளிக்க முடியாமல் திணறும் இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கார் கோப்பையின் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் அடேலடே மைதானத்தில் தொடங்கியது.
நேற்று முதல் நாளில் இந்தியா அணி 180 ரன்களுக்குள் மேசமாக ஆல்-அவுட் ஆனது.
பதிலுக்கு முதலாவது இன்னிங்சுக்கு விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி 86 ரன்களை 1 விக்கெட் இழந்து முன்னிலையில் காணப்பட்டது.
இன்று இரண்டாவது நாள் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமானது.
களத்துக்கு வந்த ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்களான ராவிஸ் ஹெட் சதம் கடந்து 140 ரன்களையும், மார்னஸ் லபுசைன் 64 ரன்களையும் அதிரடியாக அடித்து வெளியேறினார்கள்.
ஏனைய வீரர்கள் குருகிய ரன்களுக்குள் ஆட்டமிழக்க 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்சுக்காக களத்திற்கு வந்த இந்திய அணி மீண்டும் பேட்டர்களின் மேசமான ஆட்டத்தினால் திண்டாடி வருகிறது.
எதிர்பார்க்கபட்ட வீரர்களான விராட் கோலி 11 ரன்களையும், கேப்டன் ரோஹித் ஷர்மா 6 ரன்களையும் பெற்ற நிலையில் அவுட் ஆனார்கள்.
இன்றை நாளின் இறுதியில் இந்தியா அணி 128 ரன்களை 5 விக்கெட்கள் இழந்த நிலையில் களத்தில் விளையாடி வருகின்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்காக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
நாளை மூன்றாவது நாள் இன்னும் திருப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.