உலகின் மிகப் பழமையான செய்தித்தாளான ‘தி அப்சர்வர்’-ஐ விற்கும் பிரிட்டனின் ‘கார்டியன்’
பிரிட்டனின் ‘கார்டியன்’, ‘டோர்டீஸ் மீடியா’ நிறுவனத்திடம் ‘த அப்சர்வர்’ நாளிதழை விற்க வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) ஒப்புக்கொண்டுள்ளது.
ஊழியர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள, ‘த அப்சர்வர்’ எனும் உலகின் ஆகப் பழைமைவாய்ந்த ஞாயிறு நாளிதழை மீட்டெடுக்க ‘டோர்டீஸ் மீடியா’ உறுதிகூறியுள்ளது.
பிபிசி நியூசின் முன்னாள் முதலாளி ஜேம்ஸ் ஹார்டிங் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ‘டோர்டீஸ்’ நிறுவனத்தை நிறுவினார். மெதுவான, விவேகமான செய்திகளில் கவனம் செலுத்த அது நிறுவப்பட்டது.
‘த அப்சர்வர்’ நாளிதழில் முதலீடு செய்ய, 25 மில்லியன் பவுண்ட் (S$43 மில்லியன்) திரட்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
முதன்முதலில் 1791ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘த அப்சர்வர்’, பிரிட்டனின் மிகப் பிரபலமான நாளிதழ்களில் ஒன்றாகும்.
“இந்த முதலீடு அப்சர்வரின் 233 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் மற்றும் காகிதத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்” என்று GMG இன் தலைமை நிர்வாகி அன்னா பேட்சன் கூறினார்.