தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை அறிவித்ததற்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி
தென்கொரியாவில் அராணுவ ஆட்சியை அறிவித்ததற்காக ஜனாதிபதி Yoon Suk Yeol மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். மீண்டும் இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்யப்போவதில்லை என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.
அரசாங்கத்தையும் ஆளுங்கட்சியையும் நம்புவதாகக் கூறிய அவர் அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றார்.
தம் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டால் அவற்றைப் புறக்கணிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி யூன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவது குறித்து நாடாளுமன்றம் வாக்களிக்கவிருக்கிறது.
அதற்கு முன்னர் ஜனாதிபதி தொலைக்காட்சி உரையாற்றியுள்ளார். இவ்வாரம் அவர் திடீரென இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார்.
பின்னர் 6 மணிநேரத்தில் அதனை மீட்டுக்கொள்வதாக அவரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.