உக்ரைனை வீழ்த்த எந்த வழியையும் பயன்படுத்த ரஷ்யா தயார் – லாவ்ரோவ்
உக்ரைன் போரில் சமீபத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது தோல்வியைத் தடுக்க “எந்த வழியையும்” பயன்படுத்த மாஸ்கோ தயாராக உள்ளது என்பதை மேற்கு நாடுகளுக்கு புரிய வைக்கவே என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பத்திரிக்கையாளர் டக்கர் கார்ல்சன் உடனான ஒளிபரப்பு நேர்காணலில் லாவ்ரோவ் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தார்.
மேற்கு நாடுகள் “எந்த நாட்டிலும், எந்த பிராந்தியத்திலும், எந்த கண்டத்திலும் தங்கள் மேலாதிக்கத்தை உலகெங்கிலும் வைத்திருப்பதற்காக” போராடுகின்றன என்று கூறினார்.
ரஷ்யா நிலைமையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும், வாஷிங்டன் மற்றும் அதன் பங்காளிகளுடன் “எந்தவொரு தவறான புரிதலையும் தவிர்க்க” விரும்புகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
(Visited 4 times, 1 visits today)