ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணத்தை கணிக்கலாம்
ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை கூற முடியும் என நிறங்கள் குறித்த சைக்காலஜிஸ்ட் ஏஞ்சலா ரைட் கூறுகின்றார். அதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
வண்ணங்களுக்கும் நமது மூளைக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் பல நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட நிறத்தை தங்களது லோகோவாக அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அனைவருக்குமே மிகவும் பிடித்த கலர் என ஒன்று இருக்கும்.
உதாரணமாக, கருப்பு, பச்சை, ரோஸ் ஆகிய நிறங்களை கூறலாம். பொதுவாக சேல்ஸ் என்ற வார்த்தைக்குப் பின்னால் சிவப்பு நிற பேக்ரவுண்டை பயன்படுத்தி இருப்பார்கள். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்து 80% விற்பனையை அதிகரிக்க முடியும் என உளவியல் ரீதியாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர், விண்டோஸ் போன்ற பிரதான நிறுவனங்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இதற்கும் காரணம் உள்ளது. ஊதா நம்பிக்கையின் நிறமாக சொல்லப்படுகிறது. மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக சைக்காலஜிக் நிபுணர் ஏஞ்சலா ரைட் கூறுகின்றனர். இதுபோல் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு காரணம் உள்ளது.
கருப்பு நிறம் :
கருப்பு நிறமானது பவர், கண்ட்ரோல், புத்திசாலித்தனம் போன்ற விஷயங்களை குறிக்கிறது. இதனால்தான் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கருப்பு நிற அங்கியை அணிந்து கொள்கின்றனர். கருப்பு நிற பிரியர்கள் மிகவும் பக்குவப்பட்டவர்களாகவும் அவர்கள் மனதில் இருப்பதை மற்றவர்களுக்கு எளிதில் தெரிந்து கொள்ள முடியாதபடியும் இருப்பார்கள். மேலும், எந்த ஒரு சூழ்நிலையையும் சீரியஸாக கையாள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் கருப்பு நிறத்தை விரும்புவார்கள் சற்று வாழ்கை புரிதல் உடையவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
சிகப்பு நிறம் :
சிகப்பு நிறம் மோட்டிவேஷன், பவர் மற்றும் அபாயத்தை குறிப்பதாகும். சிகப்பு நிறம் பிடித்தவர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும் மற்றவர்களிடம் அதிகம் கேள்வி கேட்கும் நபராகவும் இருப்பார்கள். இதனால் எளிதில் சிக்கலிலும் மாட்டிக் கொள்வார்கள் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறிகின்றனர். மேலும், இந்த சிவப்பு வண்ணம் ரொமான்டிக் எண்ணங்களை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். அதனால் சிவப்பு நிறம் விரும்புபவர்கள் பெரும்பாலும் காதல் விரும்பியாக இருப்பார்கள். மேலும், பிடித்தவர்களிடம் அன்பாகவும், எதிரிகளிடம் வலிமையானவர்களாகவும் கோபமானவர்களாகவும் நடந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
வெள்ளை நிறம் :
வெள்ளை நிறம் மதிப்பு ,பெருமை, அமைதி போன்றவற்றை குறிக்கிறது. மேலும் உண்மையின் வெளிப்பாடாகவும் கூறப்படுகிறது. வெள்ளை நிறத்தை பிடித்தவர்கள் அமைதி, உண்மை, சுதந்திரம் போன்றவற்றை விரும்பக் கூடியவர்கள். மேலும், தன்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவராகவும், தான் முதலாளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உடையவராக இருப்பார்கள். வெண்மை நேர்மையின் அடையாளம் என்பதால் வேலைக்காக நேர்காணலுக்கு செல்பவர்கள் வெண்மை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லலாம். இதனால் நிறுவனத்தினர் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும்.
ஊதா நிறம் :
உலகில் அதிக மக்கள் விரும்பும் நிறம் என்றால் அது நீல நிறம் தான். அதிலும் 42 சதவீதம் ஆண்களும், 29 சதவீதம் பெண்களும் விரும்பும் நிறமாக உள்ளது. இந்த நிறம் அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை போன்றவற்றை குறிப்பதாகும். இதனால் பல கம்பெனிகளில் தங்கள் பிராண்டுகளுக்கு நீல வண்ண லோகோவை வைக்கின்றனர். மேலும் நீல வண்ணம் நம்மைச் சுற்றி அதிகமாக பயன்படுத்தும் போது அமைதி மற்றும் பாதுகாப்பான மனநிலை போன்ற உணர்வுகளை தூண்டும் என்கிறார் ஏஞ்சலா ரைட். அதனால்தான் பல கம்பெனிகளில் பணியாளர்களுக்கு நீல வண்ணத்தில் யூனிபார்ம் இருக்கின்றது.
நீல வண்ணம் பிடித்தவர்கள் எந்த முடிவுகளையும் லேட்டாக எடுப்பார்கள். இதனால் பல சிக்கல்களிடம் இருந்தும் தப்பித்துக் கொள்வார்கள். மேலும், எந்த ஒரு பொருளை வாங்க நினைத்தாலும் அதை பலமுறை யோசித்து வாங்குவார்கள். தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்ய துணி பவர்களாகவும் இருப்பார்கள். அதே சமயத்தில் மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டால் எளிதில் உடைந்து போய் விடுவார்கள் என்றும் ஏஞ்சலா ரைட் கூறுகின்றார்.
பச்சை நிறம் :
பச்சை நிறம் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை குறிக்கிறது. பச்சை நிறம் மூளைக்கும் மனதிற்கும் நேர்மறையான யோசனைகளை கொடுக்கிறது. ஆப்ரேஷன் தியேட்டர்களில் மருத்துவர்கள் பச்சை வண்ண உடை அணிய காரணம் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே ஒரு நேர்மறையான நம்பிக்கையை கொடுத்து பாதுகாப்பை உணரச் செய்வதற்கு தான் எனக் கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். மேலும், பச்சை நிறம் பிடித்தவர்கள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எளிதில் மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் குணமும் உடையவர்கள். . மேலும், இயற்கையை விரும்பக் கூடியவர்கள். சண்டை சச்சரவு ஏற்படும் இடத்தில் எளிதாக நகர்ந்து கொள்வார்கள். அமைதியை மட்டுமே விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள் என்கிறார் ஏஞ்சலா ரைட்.
மஞ்சள் நிறம் :
மஞ்சள் நிறத்தை ரசிப்பதன் மூலம் மூளையில் செரட்டோனின் எனும் புத்துணர்வு சுரப்பி சுரப்பதாக ஆய்வு தரவுகள் கூறுகின்றது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால்தான் சூரிய உதயம் மற்றும் மறைவை காணும் போது நம் மனதில் ஒரு மகிழ்ச்சி உணர்வு ஏற்படுகிறது. மஞ்சள் நிறம் மனிதனின் கிரியேட்டிவிட்டி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள் நிறத்தை விரும்புவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவும், தைரியமானவர்களாகவும் ,புத்துணர்ச்சியுடனும் இருப்பார்கள். அதே சமயத்தில் அதிகமாக மஞ்சள் நிறத்தை பயன்படுத்தும் போது பதட்டம், கவலை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், இவர்களுக்கு பகலில் வேலை செய்வதை விட இரவு வேலை செய்வதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள் என ஏஞ்சலா ரைட் குறிப்பிடுகிறார்.
பிங்க் நிறம் :
பிங்க் நிறம் பெரும்பாலும் பெண்களுக்கு பிடித்த நிறம் என கூறப்படுகிறது. இந்த நிறம் அன்பு மற்றும் அக்கறையை குறிக்கிறது. பிங்க் நிறம் பிடித்தவர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். பிடித்தவர்களிடம் அன்பு செலுத்துவது, அக்கறை காட்டுவதில் இவர்களை அடித்துக் கொள்ள முடியாது என்று கூட கூறலாம். ஆனால் மற்றவர்கள் மனதில் இவர்கள் மெச்சூரிட்டி இல்லாத நபராக தெரிவார்கள். மேலும், அதிக நண்பர்கள் வட்டாரத்தையும் கொண்டிருப்பார்கள் என்கிறார் சைக்காலஜிஸ்ட் ஏஞ்சலா ரைட்