அமெரிக்காவில் வகுப்பறைக்குள் நுழைந்த வௌவால் – ஆசிரியருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில் வகுப்பறையில் வௌவால் கடித்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த வௌவால் ரேபிஸ் (rabies) எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
கலிபோர்னியா மாநிலத்தின் Dos Palos-Oro Loma Joint Unified பாடசாலையில் அந்தச் சம்பவம் நடந்தது.
ஒக்டோபர் மாதம் 60 வயது லியா செனங் (Leah Seneng) தமது வகுப்பறையில் ஒரு வௌவாலைக் கண்டார்.
அதைத் தூக்கி வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோது வௌவால் அவரைக் கடித்தது. கடந்த மாதம் 22ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
செனங்கிற்கு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் உடனே ஏற்படவில்லை என அவரது நண்பர் கூறினார்.
சில வாரங்கள் கழித்துதான் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஒருசில நாளில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பொதுச் சுகாதார அதிகாரிகள் வௌவால் ஏற்படுத்தும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளனர்.