இலங்கையில் புதிய காற்று சுழற்சி உருவாகும் அபாயம் – காலநிலை குறித்து எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் நாளைய தினம் புதிய காற்று சுழற்சி உருவாகும்.
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
எனினும் இது புயலா, காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதைக் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
(Visited 60 times, 1 visits today)