தாய்லாந்தில் நிர்வாணமாக நடந்து திரிந்து வீட்டிற்கு தீ வைத்த ஆஸ்திரேலிய பிரஜை : மடக்கி பிடித்த பொலிஸார்!
தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் அவுஸ்திரேலிய நபர் ஒருவர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்ட்ரூ நிக்கோலஸ் க்ரோசியோ என்ற 38 வயதான நபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து கார்களை அடித்து நொறுக்கி வீட்டிற்கும் தீவைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரின் செயலை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிய அண்டை வீட்டார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்துள்ளதுடன், கைது செய்துள்ளனர்.





