சீனாவில் இடிந்து விழுந்த ரயில்வே கட்டுமானத் தளம் ; 13 தொழிலாளர்கள் மாயம்
சீனாவின் தென்பகுதி நகரான ஷென்சென்னில் ரயில்பாதைக் கட்டுமானத் தளம் இடிந்து விழுந்ததில் 13 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷென்சென் – ஜியாங்மென் ரயில்வே கட்டுமானத் தளத்தில் புதன்கிழமை (டிசம்பர் 4) இரவு 11 மணியளவில் திடீரென்று நிலப்பகுதி சரிந்ததாகக் கூறப்பட்டது.
வியாழக்கிழமை காலை தேடல், மீட்புப் பணிகள் தொடங்கின.மண் சரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக அதிகாரிகள் கூறினர்.
அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வெளியேற்றியதாக நெருக்கடி நிர்வாக அமைப்பு தெரிவித்தது.
அந்தக் கட்டுமானத் தளத்திற்கு அருகே உள்ள முக்கிய விரைவுச்சாலைகள், மீட்புப் பணிக்காக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷென்சென் – ஜியாங்மென் ரயில்பாதைக்கான கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றன
(Visited 2 times, 1 visits today)