பிரான்சின் அரசியல் நெருக்கடி! பதவி விலகும் பிரதமர் பார்னியர்
பிரெஞ்சு பிரதம மந்திரி மைக்கேல் பார்னியர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
Michel Barnier தலைமையிலான அரசாங்கம் இடது மற்றும் வலது சாரி கட்சிகளினால் கவிழ்க்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று இரு நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்களிப்புக்கு வந்த நிலையில், முதலாவது வாக்களிப்பிலேயே Michel Barnier இன் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
289 வாக்குகளே போதுமானதாக இருந்த நிலையில், 331 வாக்குகள் பெற்று அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது.
பிரான்சில் 1962 ஆம் ஆண்டின் பின்னர் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் ஒரு அரசு கவிழ்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது..
முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியான பார்னியர், காலை 10 மணியளவில் (0900 GMT) ராஜினாமா செய்த பின்னர், நவீன பிரெஞ்சு வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார்.
1962 இல் ஜார்ஜஸ் பாம்பிடோவின் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு எந்த பிரெஞ்சு அரசாங்கமும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடையவில்லை.