நாசாவின் தலைவராக தனியார் விண்வெளி வீரரும், Shift4 -ன் CEO ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்
அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (நாசா அமைப்பு) அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் நியமித்து உள்ளார். ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அவர் கோடீசுவரராவார்.
இதுபற்றி டிரம்ப் கூறும்போது, ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நாசா அமைப்பின் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதல், விண்வெளி அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளுக்கான வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கற்றுக்கொள்வது கொள்வது ஆகியவற்றை ஜாரெட் வழி நடத்தி செல்வார் என கூறியுள்ளார். ஜாரெட் அவருடைய மனைவி மோனிகா மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மிலா மற்றும் லிவ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த நியமன அறிவிப்புக்கு ஈசாக்மேன் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். மனித வரலாற்றில் மிக சிறந்த சாதனை படைப்பதில் முன்னணியில் திகழும் நாடாக அமெரிக்காவை வழி நடத்துவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன் என கூறியுள்ளார். டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான எலான் மஸ்க்குடன் விரிவான நிதி சார்ந்த தொடர்பை ஈசாக்மேன் வைத்திருக்கிறார்.