முகமது யூனுஸ் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
சிறுபான்மையினரை துன்புறுத்தியதாகக் கூறி, வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் மீது வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகத் குற்றம் சுமத்தியுள்ளார்.
நியூயார்க்கில் நடந்த ஒரு நிகழ்வில் மெய்நிகர் உரையில், முகமது யூனுஸ் “இனப்படுகொலை” செய்ததாகவும், இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டினார். தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் போலவே தன்னையும் தனது சகோதரி ஷேக் ரெஹானாவையும் படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
வங்காளதேசத்தின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்திருந்த போதிலும், ஆகஸ்ட் மாதம் அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொண்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்த பிறகு அவர் ஆற்றிய முதல் பொது உரை இதுவாகும்.
“ஆயுதமேந்திய போராட்டக்காரர்கள் கணபாபனை நோக்கித் தள்ளப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், பல உயிர்கள் பலியாகியிருக்கும். 25-30 நிமிடங்களில் நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று நான் பாதுகாவலர்களிடம் கூறினேன்.” என மேலும் தெரிவித்தார்.
டாக்காவின் தற்போதைய ஆட்சி சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
“இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் யாரையும் விடவில்லை. பதினொரு தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன, கோவில்கள் மற்றும் புத்த வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, இஸ்கான் தலைவர் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.