இலங்கை: 2024 இல் வழங்கப்பட்ட 361 மதுபான உரிமங்களின் விவரங்களை அம்பலப்படுத்திய அரசாங்கம்
கலால் திணைக்களம் 2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 6 வரை 361 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரத்நாயக்க தனது அறிக்கையில், இந்த உரிமங்களை விநியோகிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சங்களுக்கு ஈடாக அரசியல் குறுக்குவழிகளை எளிதாக்குவதற்காக வழங்கப்பட்டவை என்பதை என்னால் தெளிவாக கூறமுடியும் என ரத்நாயக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
மேல் மாகாணத்தில் அதிகளவான 110 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து தென் மாகாணம் 48 உரிமங்களையும், மத்திய மாகாணம் 45 உரிமங்களையும் பெற்றுள்ளது. வடக்கு மாகாணம் 32 உரிமங்களையும், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்கள் தலா 30 உரிமங்களையும் பெற்றுள்ளன. வடமத்திய மாகாணத்திற்கு 14 உரிமங்களும், கிழக்கு மாகாணத்திற்கு 22 உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட மொத்த உரிமங்களில், 172 மதுபானக் கடைகளில் மதுபானங்களை சில்லறை விற்பனை
செய்ய அனுமதிக்கும் FL-4 பிரிவின் கீழ் வழங்கப்பட்டது, முழுப் பட்டியலை நாடாளுமன்றத்தில்
சமர்ப்பித்து ரத்நாயக்க மேலும் விவரித்தார்.
000