இவர் தான் உண்மையான சாண்டா கிளாஸ் : 1700 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு!

கிட்டத்தட்ட 1,700 ஆண்டுகளில் முதல் முறையாக சாண்டா கிளாஸின் உண்மையான முகத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மைராவின் புனித நிக்கோலஸ் ஒரு ஆரம்பகால கிறிஸ்தவ துறவி ஆவார், அவர் பரிசுகளை வழங்குவதில் புகழ் பெற்றவர். இவர் தான் தற்போது அனைவராலும் சாண்டா கிளாஸ் என அழைக்கப்படுகிறார்.
ரோமானியப் பேரரசின் பிற்பகுதியில் சாண்டா கிளாஸின் தடையங்கள் கிடைத்தன. குறிப்பாக அவருடைய மண்டை ஓட்டை பயன்படுத்தியே இந்த உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1700 வருடங்களில் முதல் முறையாக சாண்டா கிளாஸின் தோற்றத்தை எம்மால் பார்க்க முடியும்.
ஆய்வின் முதன்மை ஆசிரியரான சிசரோ மோரேஸ், இது “வலுவான மற்றும் மென்மையான முகம்” என்று கூறினார்.
(Visited 56 times, 1 visits today)