கேரளாவில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து – 5 மருத்துவ மாணவர்கள் மரணம்
ஆலப்புழா மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பயணிகள் பேருந்து மற்றும் கார் மோதியதில் ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் இறந்தனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர்.
காரில் ஏழு மாணவர்களைக் கொண்ட குழு அதிவேகமாக பயணித்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களை மீட்க அவசரகால பதிலளிப்பவர்கள் காரின் சிதைந்த எச்சங்களை வெட்ட வேண்டியிருந்தது.
பலியானவர்கள் முகமது, முஹாசின், இப்ராகிம், தேவானந்த் மற்றும் ஸ்ரீதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்து மாணவர்களில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த மேலும் 2 மாணவர்கள் சிகிச்சைக்காக ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வந்தனம் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.