இலங்கையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இமேஷா முதுமால நியமனம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக மகளிர் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.டபிள்யூ.ஐ. இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகம் இதனை உறுதி செய்துள்ளது..
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய மகளிர் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முதுமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)