Oxford தெரிவு செய்த இவ்வாண்டின் சொல் – ‘Brain rot’என்பதன் அர்த்தம் என்ன?
Oxford University Press இவ்வாண்டுக்கான ஆங்கிலச் சொல் ஒன்றை தெரிவு செய்துள்ளது.
அதற்கமைய, அந்த சொல் ‘Brain rot’ என குறிப்பிடப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டுப் பயனற்ற தகவல்களை உள்வாங்கும்போது மனநிலை பாதிப்புக்குள்ளாவதை அந்தச் சொல் குறிக்கிறது.
அந்தச் சொல் பெரும்பாலும் இளைஞர்களின் தொடர்பில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஓராண்டில் ‘Brain rot’ எனும் சொல்லின் பயன்பாடு 230 சதவிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆங்கில மொழி மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக Oxford Languagesஇன் தலைவர் Casper Grathwohl தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)