இலங்கை செய்தி

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்: உறுப்பினர் நியமனத்துக்கு விண்ணப்பம் கோரல்

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (கா.ஆ.அ.) உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டல் வேண்டும். (குறித்த தகவல் மற்றும் விண்ணப்பம் செய்தியின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது)

அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை