இலங்கையில் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்படும் அபாயம்
இலங்கையில் 10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்கப்படவுள்ளது.
குடிவரவு திணைக்களம் இது தொடர்பில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.
இலத்திரனியல் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சாதாரண கடவுச்சீட்டுகளின் அளவு போதுமானதாக இருக்காது என கருதி இந்த கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு விலைமனு கோரப்படவுள்ளது.
எனினும் விலைமனு கோரலுக்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)