இஸ்கான் அமைப்பின் மேலும் இரு துறவிகள் பங்களாதேஷில் கைது
வங்கதேசத்தில் கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் (இஸ்கான்) இந்து அமைப்பின் மேலும் இரண்டு துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டோகிராம் பெருநகர காவல்துறையின் கூற்றுப்படி, ருத்ரபிரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் ஷ்யாமா சுந்தர் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்கான் ஆன்மிகத் தலைவர் சின்மோய் தாஸ் கிருஷ்ணாவுக்கு உணவு, மருந்து மற்றும் பணம் வழங்கச் சென்ற துறவிகள் கைது செய்யப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சின்மோய் தாஸின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட செய்தியை புரோபோர்டக் சங்கத்தின் முதல்வர் ஸ்வதந்த்ரா கௌரங்க தாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், சின்மோய் தாஸ் உட்பட இஸ்கான் நிறுவனத்துடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது.
இஸ்கான் ஆன்மிகத் தலைவர் சின்மோய் தாஸ் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, பங்களாதேஷ் பொஸிஸார் கடந்த நாள் கைது செய்தனர்.
இந்து சமூகப் பேரணியின் போது தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 28 அன்று, சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், வங்காளதேச அரசு இஸ்கானைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
பாதுகாப்புப் படையினருக்கும் இந்து மதத் துறவியின் சீடர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது உதவி அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் உயிரிழந்தார் என்றும் வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.