சச்சினின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஜோ ரூட், 2ஆவது இன்னிங்ஸில் 23 ஓட்டங்கள் அடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 4ஆவது இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 4ஆவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 1,625 ஓட்டங்கள் அடித்துள்ளார். தற்போது ஜோ ரூட் 1,630 ஓட்டங்களை அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்