அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம கும்பலால் சுட்டுக்கொலை

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அந்தச் சம்பவம் சிகாகோ மாநிலத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை (நவம்பர் 29) அதிகாலை நிகழ்ந்தது.
சாய் தேஜா நுகராப்பு எனப்படும் அந்த மாணவர் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிகாகோவில் எம்பிஏ பட்டப் படிப்பு படிக்கும் நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் பெட்ரோல் நிலையத்தில் அவர் வேலை செய்து வந்தார்.
திடீரென்று வந்த மர்மக் கும்பல் ஒன்று சாய் தேஜாவைச் சுட்டுவிட்டுத் தப்பியது. என்ன காரணத்தால் அவர்கள் சுட்டார்கள் என்ற காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிகாகோ நிர்வாகத்தை அங்குள்ள இந்தியத் தூதரக அலுவலகம் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடா்பாக வடஅமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தை (தானா) தொடா்புகொண்டதாகவும் சாய் தேஜாவின் உடலை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி மதுசூதன் தத்தா தெரிவித்தாா்