இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் நேற்று மாலை அறிவித்தது.
தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதியின் ஊடாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)