இந்தோனேசியாவில் அதிர்ச்சி – நிலச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலாப் பேருந்தில் இருந்து மேலும் இரண்டு உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 27 பேர் இறந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள மேடான் நகரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய பாதையான பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், சுற்றுலாப் பேருந்து மீது மரங்கள், மண் மற்றும் பாறைகளால் மூடப்பட்ட பேருந்தில் இருந்த 7 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் மேடான் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியானது.