ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்த திட்டமிடும் ரஷ்யா : மிரட்டும் புட்டின்!
ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் கெய்வில் உள்ள முக்கிய மையங்களை தாக்கவுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைனின் எரிசக்தி கட்டடத்தை மொஸ்கோ தாக்கிய நிலையில் பல மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். உயர் மட்ட சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் பதுங்கு குழிக்குள் அடைகலம் தேடியுள்ளனர்.
இந்நிலையிலேயே புட்டினின் மிரட்டல் வந்துள்ளது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகால யுத்தம் சமீபத்திய நாட்களில் கூர்மையான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது.
ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் இரு தரப்பினரும் புதிய ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளனர்.
உக்ரைனின் கடுமையான குளிரான வானிலை நிலவும் போது புட்டினின் இந்த திட்டம் அவர்களை மேலும் நிலை குழைய வைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.