இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள் : அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்
அம்பாறையில் ஐந்து மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை உழவு இயந்திரத்தில் வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பாதையின் ஆபத்தான நிலைமைகள் காரணமாக அந்த வீதியை பயன்படுத்த வேண்டாம் என இராணுவம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் பலத்த நீரோட்டத்தில் கவிழ்ந்தது. ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஐந்து பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி, ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.