பிரான்ஸில் ஈபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரான்ஸில் ஈபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் பொருட்டு பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கமைய, அங்கு குற்ற செயல்கள் குறைவடைந்துள்ளது.
இந்த வருட ஜனவரியில் இருந்து ஒக்டோபர் மாத இறுதி வரை 86 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 196 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில் 305 தககுதல்களும் இதே காலப்பகுதியில் பதிவாகின.
அதேவேளை, இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 462 கொள்ளைச் சம்பவங்களும், 2023 ஆம் ஆண்டில் 828 கொள்ளைகளும், 2022 ஆம் ஆண்டில் 1,145 கொள்ளைகளும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈபிள் கோபுரத்தைச் சூழ உள்ள பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக மாறி வருவதை உறுதிசெய்யக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.