ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சேவை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 49 யூரோ பயண அட்டை பயன்பாடு அமுலுக்கு வந்தது. இந்த நிலையில் அடுத்த வருடம் 49 யூரோ பயண அட்டை பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மாநில போக்குவரத்து அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
கூட்டு அரசாங்கத்திடையே பிளவுகள் ஏற்பட்டு லிபரல் டெமோக்ரஸி கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அரசாங்கம் பெரும் நெருக்கடியில் உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் 2026 ஆம் ஆண்டு இந்த பயண அட்டை அமுலில் இருக்குமா இல்லையான என்பது சந்தேகங்கள் எழுந்துள்ளன.
2026 ஆம் ஆண்டில் 49 யுரோ பயண அட்டையை எவ்வாறு தொடர்ந்து அமுலில் வைப்பது என்பது தொடர்பான எவ்விதமான முடிவும் சமகால அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை.
எதிர்வரும் ஆண்டு ஜெர்மனியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசாங்கம் 49 யுரோ பயண அட்டையை தொடர்ந்து பாவணையில் வைத்திருக்கும் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளன.