உலகின் மிக வயதான மனிதர் இங்கிலாந்தில் காலமானார்
உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜான் டினிஸ் வுட் தனது 112வது வயதில் காலமானார்.
அவர் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் இறந்தார்.
டினிஸ்வுட் இசையினாலும் அன்பினாலும் சூழப்பட்ட தனது இறுதி ஆண்டுகளைக் கழித்ததாக குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர்.
பல ஆண்டுகளாக அவரை கவனித்து வந்தவர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
114 வயதான வெனிசுலாவைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறப்பிற்குப் பிறகு உலகின் மிக வயதான நபராக மாறுவார்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே ஆண்டில், 1912ல் லிவர்பூலில் பிறந்த டினிஸ்வுட், இரண்டு உலகப் போர்களிலும், இரண்டு உலகளாவிய தொற்றுநோய்களிலும் தப்பினார்.
இரண்டாம் உலகப் போரின் போது ராயல் ஆர்மி பே கார்ப்ஸில் பணியாற்றினார். அவர் 1942 இல் பிளட்வெனை மணந்தார்.
ஒரு மகள், நான்கு பேரக்குழந்தைகள் மற்றும் மூன்று கொள்ளுப் பேரக்குழந்தைகளைக் கொண்ட டினிஸ்வுட், பின்னர் எண்ணெய் துறையில் கணக்காளராக பணியாற்றினார். இவரது மனைவி 1986ல் இறந்தார்.
டினிஸ்வுட் எந்த ஒரு சிறப்பு உணவுமுறையையும் பின்பற்றவில்லை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவருக்கு பிடித்தமான வறுக்கப்பட்ட மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டுள்ளார்.